Title | : | Raavanan Aryavarthaavin Ethiri |
---|---|---|
Author | : | Amish Tripathi |
Release | : | 2022-03-25 |
Kind | : | audiobook |
Genre | : | Fiction |
Preview Intro | |||
---|---|---|---|
1 | Raavanan Aryavarthaavin Ethiri | Amish Tripathi |
இந்தியா 3400 பிசிஈ: அமளி, ஏழ்மை, மற்றும் குழப்பங்கள் நிறைந்த ஒரு நாடு. நிறைய மனிதர்கள் மௌனமாக அவதிப் படுகின்றனர். சிலர் போராடுகின்றனர். சிலர் சிறந்த உலகுக்காக சண்டையிடுகின்றனர். சிலர் தங்களுக்காகவே போராட்டத்தில் இறங்குகின்றனர். சிலருக்கு எந்த அக்கறையும் இல்லை. ராவணன். அவன் தந்தை அவருடைய காலத்தில் மிகுந்த பிரசித்தி பெற்ற ஒரு ரிஷி. யாருக்குமே இல்லாத சிறப்பு ஆற்றல்களை கடவுள்களிடம் இருந்து அருளாகப் பெற்றவர். விதி அவரை கொடுமையின் எல்லைக்கு அழைத்துச் சென்றது. பதின் பருவத்திலேயே அனைவரின் மனதிலும் திகிலை உண்டாக்கக் கூடிய கடக் கொள்ளைக்காரன், சம அளவில் தைரியம், குரூரம் மற்றும் செய்தே முடிப்பேன் என்ற மனத் திண்மை ஒருங்கே பெற்றவன். மனிதர்களுள் சிறந்தவனாக ஓங்கி வளர வேண்டும், அடக்கி ஆண்டு, கொள்ளை அடித்து, தான் நினைக்கும் சிறப்பை எப்படியாவது அடைந்தே தீருவது என்ற திண்மை. முரண்களின் வடிவானவன், படு கொடுமைகளை அஞ்சாமல் செபவன், மெத்த படித்த மேதாவி. எதிர்பார்ப்பின்றி அன்பையும் வைப்பான், குற்ற உணர்ச்சியின்றி கொலையும் செய்வான். இந்த பிரமிக்கவைக்கும் இராமச்சந்திரா தொடரின் மூன்றாவது புத்தகம், ராவணனை, இலங்கையின் மன்னனை நமக்கு அறிமுகப்படுத்துகிறது. இருளிலும் அந்தகார இருளின் மீது வெளிச்சம் அடிக்கப்படுகிறது. அவன் வரலாறு காணாத கொடூரனா, அல்லது, எப்பொழுதுமே இருளில் மாட்டி தவிக்கும் சாதாரண மனிதனா? இந்த புராணம் சார்ந்த, மிகவும் சிக்கலான, கொடூரம் நிறைந்த, உணர்ச்சி குவியாலான, பல சாதனைகளைச் சாதித்த சாதனையாளனைப் பற்றிய கதையை கேளுங்கள். |